வாடிவாசல் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் இல்லை! இவர் தான்.. ஷாக் கொடுத்த பிரபலம்
வாடிவாசல்
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். இப்படம் குறித்து அறிவிப்பு வெளிவந்து சில ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு துவங்கவில்லை.

வெற்றிமாறனுக்கும் சூர்யாவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது அதனால் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது என ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

விஜய்யின் கோட் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா... கூச்சலிட்ட மகிழ்ந்த ரசிகர்கள்
இதுகுறித்து வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பியபோது, படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், வாடிவாசல் படம் குறித்து பிரபல இயக்குனர் வசந்தபாலன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

முதல் இயக்குனர் இவரா
இதில் "வாடிவாசல் படத்தை முதன் முதலில் இயக்கவிருந்தது வெற்றிமாறன் இல்லை, இயக்குனர் லிங்குசாமி தான். அந்த படத்திற்கு நான் திரைக்கதை எழுதவிருந்தேன். ஆனால், ஜல்லிக்கட்டை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி திரைக்கதை அமைக்க முடியும் என சந்தேகம் இருந்தது. அதன்பின் அது சரியவரவில்லை என கைவிட்டோம். இன்று தமிழ் சினிமா பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படமாக மாறியுள்ளது" என கூறியுள்ளார்.

சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri