ஆட்டோகிராப் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா.. இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை
ஆட்டோகிராப் படத்தின் முதல் ஹீரோ
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் அனைவருக்கும் பிடித்த ஒரு சேரன். இவர் இயக்கி, நடித்து காதல் கதைக்களத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆட்டோகிராப்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இன்று வரை சேரனுக்கு மக்கள் மத்தியில் அடையாளமாக இருக்கும் படங்களில் முக்கியமான படம் இதுவே ஆகும்.
இந்நிலையில், இப்படத்தின் கதையை முதன் முதலில் தளபதி விஜய்யிடம் தான் சேரன் கூறியுள்ளாராம். ஆனால், அப்போது விஜய் இப்படத்தை நிராகரித்து விட்டாராம்.
விஜய் மட்டுமின்றி பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார்களாம். இதன்பின், சேரன் தானே முன் வந்த இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததாக தகவல் கூறப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
