தமிழ் சினிமாவில் முதல் காதல் திருமண ஜோடி யார் தெரியுமா.. யாருனு பாருங்க
நடிகர், நடிகை காதல் திருமணம்
தமிழ் திரையுலகில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர், நடிகை காதலித்து திருமணம் செய்துகொள்வது சகஜம் தான்.
நடிகர் அஜித், நடிகை ஷாலினியுடன் இணைந்து நடிக்கும் பொழுது இருவரிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டார்கள்.
அதே போல், நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. இதே போல் பல நட்சத்திரங்கள் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
முதன் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி
ஆனால், இவர்களுக்கெல்லாம் முன், முதன் முதலில் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகை யார் தெரியுமா. வேறு யாருமில்லை, பி.யூ. சின்னப்பா மற்றும் சகுந்தலா தான்.
ஆம், தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், தயாரிப்பாளராக இருந்தவர் பி.யூ. சின்னப்பா. இவர் நடித்த பிரிதிவிராஜன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை சகுந்தலா.
ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலித்துள்ளனர். அதன்பின் திருமணம் செய்துகொண்ட இந்த காதல் தம்பதிக்கு ராஜ் பகதூர் எனும் ஒரு மகனும் உள்ளார். இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகை.