பாலிவுட் நடிகர்களின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? லிஸ்ட் இதோ
பாலிவுட் சினிமா
பாலிவுட் படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால், தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கத்தால் பாலிவுட் சினிமாவிற்கு இருக்கும் முகத்தை முற்றிலும் மாற்றி விட்டது.
குறிப்பாக தெலுங்குப் படங்களான பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா, கன்னட படமான கேஜிஎப் 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றி ஹிந்தி திரையுலகின் ரசனையையும் சேர்த்து மாற்றிவிட்டது.
அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் முதல் சம்பளம் என்ன என்பதை குறித்து காணலாம்.
அமிதாப் பச்சன்
பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இப்போதும் இளம் கலைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் நிறைய படங்கள் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் கல்கி 2898 ஏடி படம் வெளியாகி இருந்தது. இவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது ஆனால் இவர் தனது வாழ்க்கையில் முதல் சம்பளமாக ரூ.500 வாங்கியுள்ளார்.
ஷாருக்கான்
ஷாருக்கான், தையா தையா என ரயில் மீது நடனம் ஆடி தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் இப்போது ஜவான் வரை ரசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.
பாலிவுட் பாட்ஷாவாக இப்போது கொண்டாடப்படும் இவர் சின்னத்திரையில் சீரியலில் தான் தனது முதல் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
சீரியலில் நடிக்க தனது முதல் சம்பளமாக ரூ.50 வாங்கியுள்ளார்.
சல்மான் கான்
சல்மான் கான் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். படங்களில் நடிப்பதை தாண்டி இவர் பிக்பாஸ் ஹிந்தி ஷோவை தொடர்ந்து தொகுத்து வழங்கி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
இவர் பின்னணி நடனக் கலைஞராக நடனம் ஆட ரூ.75-யை தனது முதல் சம்பளமாக வாங்கியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
