தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம்.. மாபெரும் சாதனை
ஒரு படத்திற்கு விமர்சன ரீதியாக வெற்றி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி வசூல் ரீதியாகவும் வரவேற்பு இருக்க வேண்டும். அப்படி கிடைத்தால் மட்டுமே அது வெற்றிப்படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும்.
சிவாஜி
அப்படி, பாக்ஸ் ஆபிசில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வெற்றி முத்திரையை இன்று வரை பதித்துள்ளது.

வசூல் சாதனை
இந்நிலையில், இப்படம் வெளிவந்த இன்றுடன் 15ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 15 ஆண்டுகளாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள சிவாஜி தான், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம். ஆம், அதுவரை வசூலில் எந்த ஒரு படமும் எட்டமுடியாத ஒரு உயரத்தை சிவாஜி எட்டியது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் மணிவண்ணன், வடிவுக்கரசி, ஸ்ரேயா, விவேக், ராஜா, சுமன், சாலமன் பாப்பையா, போஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan