விண்வெளியில் படத்தை எடுத்துமுடித்த படக்குழு.. திரையுலகிலேயே இதான் முதன்முறை

movie challenge hollywood
By Kathick Oct 07, 2021 02:00 PM GMT
Report

விண்வெளியை மையமாக வைத்து ஹாலிவுட் திரையுலகில் கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஆனால், முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர்.

கிலிம் ஷிபென்கோ இப்படத்தை இயக்கியுள்ளார். கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்கு செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை.

சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு தீவிர பயிற்சியும், பரிசோதனையும் படக்குழுவினருக்கு நடத்தப்பட்டிருக்கிறது.

சோயஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்று அங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி இப்படத்தை எடுத்துள்ளார்கள்.

விண்வெளியில் படத்தை எடுத்துமுடித்த படக்குழு.. திரையுலகிலேயே இதான் முதன்முறை | First Time In Cinema History


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US