பிக் பாஸ் அல்ட்டிமேட்டில் முதல் வைல்டு கார்டு என்ட்ரி! இவரா? லீக் ஆன தகவல்
பிக் பாஸ் 5ம் சீசன் முடிந்த சில வாரங்களிலேயே பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி ஷோவை தொடங்கிவிட்டனர். முந்தைய சீசன்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று வனிதா விஜயகுமார் திடீரென பிரச்சனை செய்து அடம்பிடித்து ஷோவில் இருந்து வாலன்டியராக வெளியேறி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். மேலும் இந்த வாரத்தில் இருந்து சிம்பு தான் தொகுப்பாளராக வர போகிறார் என சொல்லப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த வாரம் இறுதியில் ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அது ஓவியாவாக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஆனால் வந்திருக்கும் தகவல் படி விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் சதீஷ் தான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருகிறார் என தெரிகிறது.