ஏய் கைய வெட்டிருவேன்.. திவாகரை மிரட்டிய FJ.. ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 முதல் நாளில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக வாட்டர் மெலன் ஸ்டார் என தன்னை கூறிக்கொள்ளும் திவாகரிடம் பலருக்கும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படுகிறது.
இதில், இன்று காலை ரம்யா ஜோ மற்றும் திவாருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மற்றவர்கள் சமாதானம் செய்ய பார்த்தனர். அப்படி இருந்தும் இருவரும் அதை கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் ரம்யா ஜோவின் பேச்சு திவாகரை கடுப்பேற்ற, அவர் கைநீட்டி 'ஏய் சென்றதை கேளுப்பா' என கத்திச்சொல்ல, ரம்யா ஜோ 'இந்த கத்துற வேலையெல்லாம் இங்க வேண்டாம்' என கூறுகிறார். இப்படியே இந்த சண்டை போக, திவாகர் ரம்யா ஜோவை பார்த்து 'நீ படிச்சுருக்கியா இல்லையா? நாகரிகம் தெரியுமா' என கேட்கிறார்.
இதற்கிடையில் FJ உள்ளே வர, திவாகர் அவரை பார்த்து கைநீட்டி பேசவும், 'கையை இறக்கு, இல்ல வெட்டிருவேன்' என FJ கூறுகிறார். இதற்கு பதிலாக 'வெட்டிருவியா நீ' என திவாகர் கேட்க, இப்படியே இந்த சண்டை நீடிக்கிறது. இதன்பின் கம்ருதீன் மற்றும் திவாகருக்கு இடையே கைகலப்பு ஏற்பட, மற்றவர்கள் அவர்களை பிரித்துவிடுகிறார்.
ரெட் கார்டா..?
இப்படியே தொடர்ந்து மற்ற போட்டியாளர்களும் திவாருக்கும் ஏதாவது வகையில் மோதல் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், 'கையை இறக்கு, இல்ல வெட்டிருவேன்' என FJ கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சிலர் முதல் வாரமே ரெட் கார்டா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆரம்பித்து இரண்டாவது நாளிலேயே இவ்வளவு கலவரமா என சிலர் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் வாரத்தின் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்று.