14 மாதங்களாக சித்திரவதை அனுபவித்த விஜயகாந்த் பட நடிகை.. இப்படி ஒரு கொடுமையா!
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியான கஜேந்திரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஃப்லோரா சைனி. இதையடுத்து இவர் குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சித்திரவதை
சமீபத்தில் சைனி, ஒரு வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'நான் இளம் வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறேன். அப்போதே ஹிந்தியில் மட்டும் நான் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன்.
'அந்த நேரத்தில் நான் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தேன். அதன் பின்னர் என் வாழ்க்கை தலைகீழாக மாறியது'.
'அந்த தயாரிப்பாளர் என்னை மிகவும் அடித்து துன்புறுத்தினார். மேலும் என்னுடைய மொபைல் போனையும் பிடுங்கி கொண்டார். என்னை மோசமாக அவர் சித்திரவதை செய்து 14 மாதங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்க முடியாத அளவிற்கு கொடுமை படுத்தினார்'.
விசாரணை
'நான் அவரை விட்டு ஓடி வந்துவிட்டேன். இப்போது நான் என்னுடைய பெற்றோருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
