குக் வித் கோமாளிக்கு வந்த நபர் கைது.. தற்போது சிறையில் உள்ளார்.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்
CWC
குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்று பைனல் போட்டி ஒளிபரப்பாக உள்ள நிலையில், வெற்றியாளர் ராஜு என கடந்த சில நாட்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது.
பிக் பாஸ் மட்டுமின்றி குக் வித் கோமாளி போட்டியின் டைட்டிலையும் ராஜு தட்டி சென்றுள்ளார். அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் ராஜுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ராஜு கூறிய ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ராஜு கூறிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், தற்போது சிறையில் இருப்பதாக ராஜு தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "நான் ஒரு ஃபாரினரை உருவ கேலி செய்துவிட்டேன் என நிறைய பேர் என்னை திட்டினார்கள். அதனால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தேன். அவரை பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால், அந்த வீடியோ வைரல் ஆனதும், அவரை சிறையில் போட்டு இருக்காங்க. காரணம், அவர் ஒர்க் பர்மிட் இல்லாமல் வேலை பார்த்துட்டு இருந்திருக்கிறார்" என ராஜு கூறியுள்ளார்.