தளபதி 66 படத்திற்காக போட்டி போடும் நான்கு முன்னணி இயக்குனர்கள், யார் யார் தெரியுமா
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் வெளியாகி திரையரங்கிற்கு ரசிகர்கள் படையெடுத்ததை தொடர்ந்து 240 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் டெஸ்ட் லுக் சமீபத்தில் சன்-டிவி ஆப்பிஸில் நடந்தது.
இந்நிலையில் தளபதி 65 படத்தின் பணிகளே துவங்கதே நிலையில் இப்போதே தளபதி 66 படம் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.
தளபதி 66 படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அப்படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து ஆகிய நான்கு இயக்குனர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.