Friends வெப் தொடரில் நடித்த நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Friends வெப் தொடர்
உலகளவில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்று Friends. 1994ஆம் ஆண்டு தான் இந்த வெப் தொடர் முதன் முதலில் ஒளிபரப்பாக துவங்கியது.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2004 வரை 10 சீசன்களாக Friends தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

இந்த வெப் தொடரில் Jennifer Aniston, Courteney Cox, Lisa Kudrow, Matt LeBlanc, Matthew Perry, David Schwimmer உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் Chandler Bing கதாபாத்திரத்தில் நடித்து மேத்யூ பெர்ரி.
அதிர்ச்சி செய்தி
இந்நிலையில், Friends வெப் தொடர் மூலம் பிரபலமான நடிகர் மேத்யூ பெர்ரி தனது 54 வயதில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது.

மேலும் திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.