கேப்ரில்லாவுக்கு வந்த கொச்சையான கமெண்ட்!! அவர் கொடுத்த பதிலை பாருங்கள்..
கேப்ரில்லா சார்ல்டன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா சார்ல்டன்.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது கேப்ரில்லா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பதிலடி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கேப்ரில்லா சார்ல்டன், தனக்கு வந்த மோசமான கமெண்ட் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, எப்படி உடை அணிந்தாலும் தவறாக தான் கமெண்ட் செய்கிறார்கள். சேலையில் போட்டோ போட்டாலும்,டி ஷர்ட்டில் போட்டோ போட்டாலும் மோசமாகவே கமெண்ட் வருகிறது. அதனால் வரும் எனக்கு கமெண்ட்களை நான் பார்ப்பதில்லை என்று கேப்ரில்லா சார்ல்டன் தெரிவித்துள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
