சன் டிவியின் மருமகள் தொடருக்காக செம ரிஸ்க் எடுத்து ஒரு காட்சியை நடித்திருக்கும் கேப்ரியல்லா... அவரே வெளியிட்ட வீடியோ
கேப்ரியல்லா
சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் நாம் நடித்த ஒரு சீரியலாவது ஒளிபரப்பாக வேண்டும் என்பது சின்னத்திரை கலைஞர்களின் ஆசை.
அது பலருக்கு நிறைவேறியுள்ளது, சிலருக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
அப்படி விஜய் டிவியில் 7சி, ஈரமான ரோஜாவே 2 சீரியல், நடன நிகழ்ச்சி என கலக்கி இப்போது ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமாக வளர்ந்திருக்கிறார் கேப்ரியல்லா.
மருமகள்
இப்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார். கடந்த ஜுன் மாதம் 2024ம் ஆண்டு தான் இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது, இப்போது டிஆர்பியில் டாப் 5ல் இடம்பெற்று வருகிறது.
தற்போது இந்த மருமகள் தொடரின் ஒரு காட்சிக்காக பாவாடை தாவணியில் செம சண்டை காட்சியில் நடித்து அசத்தியிருக்கிறார்.
கொஞ்சம் ரிஸ்கான இந்த சண்டை காட்சியில் நடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் நல்ல முயற்சி என வாழ்த்து கூறி வருகிறார்கள்.