வெறுப்பேற்றிய ரசிகர்.. செம கடுப்பான பிக் பாஸ் கேப்ரியலா.. காரணம் என்ன
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா.
இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகி ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இதில் கிடைக்காத பிரபலம், பிக் பாஸ் சீசன் 4 எனும் ஒரே நிகழ்ச்சி மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக கேப்ரியலா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த கேப்ரியலாவிடம், ரசிகர் ஒரு ' சீரியல் மாதிரியான சின்ன ஊடகத்தில் நடிக்கிறீர்கள் ' என கேட்டார். இதற்கு பொறுமையாக பதிலளித்துவிட்டார்.
ஆனால், இதே கேள்வியை மீண்டும் வேறொரு ரசிகர் கேட்க, " உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா. உங்க வேலையை பத்தி நான் கமெண்ட் சொன்னேனா. வாழ விடுங்க.." என கடுப்பாகி கூறியுள்ளார்.