கேம் சேஞ்சர் படம் 4 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கேம் சேஞ்சர்
2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கேம் சேஞ்சர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். படம் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது.
ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை. மாறாக கலவையான விமர்சனங்களையும், சில கடுமையான விமர்சனங்களை கூறினார்கள்.
வசூல்
இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 170 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 450 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தால் மட்டுமே பிரேக் ஈவன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
