ஷங்கரின் கேம் சேஞ்சர் மாபெரும் நஷ்டம்.. பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்
கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
மாபெரும் நஷ்டம்
இப்படத்தை ரூ. 450யில் இருந்து ரூ. 500 கோடி வரை செலவு செய்து எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மொத்த வசூல் ரூ. 200 கோடிக்கும் மேல் தான் இருக்கும் என்கின்றனர்.
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் மூலம் ரூ. 200 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
