இரண்டு நாட்களில் கேம் சேஞ்சர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கேம் சேஞ்சர்
கடந்த ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அதனை சரிசெய்யும் விதமாக கேம் சேஞ்சர் படத்தின் வெற்றி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற தவறிவிட்டது. கடந்த 10ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. காலம்கடந்த கதைக்களம், இது ஷங்கர் படமாகவே இல்லை என பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள அருண் பிரசாத் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா?
வசூல் விவரம்
முதல் நாள் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும், இரண்டாவது நாளே அடிவாங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஆம், கேம் சேஞ்சர் திரைப்படம் இரண்டாவது நாளில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ. 125 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
