கேம் சேஞ்சர் படத்திற்கு லாபம் கிடைக்க இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. எவ்வளவு தெரியுமா, இதோ
கேம் சேஞ்சர்
இந்தியன் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். ராம் சரண், கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
மேலும் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.
கேம் சேஞ்சர்
இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரேக் ஈவன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவ்வளவு வசூல் செய்தால் தான், லாபகரமான படமாக கேம் சேஞ்சர் அமையும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம்.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே பிரேக் ஈவன் ஆகும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கேம் சேஞ்சர் படம் செய்யப்போகும் வசூல் சாதனையை.