ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா
கேம் சேஞ்சர்
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி, பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்திருந்தார்.
கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அரசியல் கதைக்களத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், இப்படம் வசூலில் அடிவாங்கியது.
OTT ரிலீஸ்
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.