பிக் பாஸ் வெற்றியாளர் அர்ச்சனாவை கடுமையாக விமர்சனம் செய்த கானா பாலா.. கோபத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் - அர்ச்சனா
மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில இதை விமர்சனம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 16 லட்சம் வாக்குகளை பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் டைட்டில் வென்றது மட்டுமின்றி, ரூ. 50 லட்சம் பரிசையும் தட்டி சென்றார். மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ஒரு பிளாட் பரிசாக வழங்கப்பட்டது.
அர்ச்சனாவின் வெற்றி குறித்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், சிலர் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் 7ல் 23 போட்டியாளர்களின் ஒருவராக களமிறங்கிய கானா பாலா, அர்ச்சனா குறித்து கடுமையான விமர்சனத்தை கூறியுள்ளார்.
கடுமையாக விமர்சித்த கானா பாலா
இதில் 'பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா என்ன செய்தார், என்ன Effort கொடுத்தார். ஒரு சின்ன பிரச்சனை, அதில் சண்டை போட்டுவிட்டு, நாலு வாரம் அதை வைத்து அழுதுகொண்டே இருந்தார். இதுக்கு பெயர் Effort-ஆ. முதல் நாளில் இருந்து அழுக துவங்கிவிட்டார். உனக்கு ஆட, பாட, பேச எல்லாமே தெரியும். வேலை செய்யவும் தெரியும். நான் என்ன வேலை செய்யவா அங்கு சென்றேன்" என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அர்ச்சனா குறித்து கானா பாலா பேசியுள்ள இந்த விஷயம், அர்ச்சனாவின் ரசிகர்களுக்கு கோபத்தை கொடுத்துள்ள நிலையில், அவர்கள் தங்களுடைய பதில்களை சமூக வலைத்தளத்தில் கானா பாலாவை தாக்கி தெரிவித்து வருகிறார்கள்.
வீட்டிற்குள் இருந்த போது தான் சண்டை என்று பார்த்தல், தற்போது நிகழ்ச்சி முடிந்த அனைவரும் வெளியே வைத்த பிறகு கூட இந்த சண்டை ஓயவில்லை.
You May Like This Video