ரூ. 18 லட்சம் பணம் எடுத்து கிளம்பிய கானா வினோத் 95 நாட்கள் பிக்பாஸில் வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் 9
தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்றால் அது விஜய் டிவி தான்.
இதில் ஒளிபரப்பான கேம் ஷோக்கள், பாடல், நடனம் நிகழ்ச்சிகள் என விதவிதமான கான்செப்டில் விஜய்யில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.
தற்போது சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், அண்டா காகசம் என தொடர்ந்து நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த ஷோக்களில் மிகவும் ஹிட்டானது என்றால் பிக்பாஸ் 9வது சீசன் தான். விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது.

கானா வினோத்
தற்போது பிக்பாஸ் 9வது முடிவை எட்டிவிட்டது, அதாவது 95 நாட்கள் ஒளிபரப்பாகிவிட்டது. இன்னும் 5 நாட்களில் பிக்பாஸ் 9வது சீசன் முடிவுக்கு வரப்போகிறது, இந்த சீசனை யார் ஜெயிப்பார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ரசிகர்கள் பலரும் கானா வினோத் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் ரூ. 18 லட்சம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

இந்த ரூ. 18 லட்சத்தை தவிர, 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கானா வினோத் எவ்வளவு சம்பளம் பெறுவார் என்ற விவரமும் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 29 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 95 நாட்களுக்கு மொத்தமாக ரூ. 27 லட்சத்து 55 ஆயிரம் வரும் என்கின்றனர்.
ரூ. 18 லட்சம் ப்ளஸ் ரூ. 27 லட்சம் சேர்த்து மொத்தமாக ரூ. 45 லட்சம் வரும் எனப்படுகிறது. இந்த பண விவரத்தை பார்க்கும் போது அவர் இந்த பணத்தை எடுத்து வெளியே வந்தது சரியான முடிவு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.