காந்தி கண்ணாடி திரை விமர்சனம்
KPY பாலா இவருக்கென்று சின்னத்திரை தாண்டி இவர் செய்யும் உதவிகளுக்கு என்றே மிகப்பெரிய மக்கள் ஆதரவு இருக்க, தற்போது பாலா ஹீரோவாக நடித்துள்ள காந்தி கண்ணாடி எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
காந்தி மகான்(பாலாஜி சக்திவேல்) செகியூரிட்டியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், அவருக்கு மனைவியாக அர்ச்சனா. ஒருநாள் அர்ச்சனாவிற்கு 60வது கல்யாணத்தை ஒரு தம்பதி கொண்டாடுவதை பார்த்து நாமும் இப்படி கொண்டாடினால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம் வருகிறது.
இதை தெரிந்துக்கொள்ளும் காந்தி மகான் தன் மனைவி ஆசை நிறைவேற வேண்டும் என இதற்கான வேலைகள் அதாவது விழா ஏற்பாடுகளை செய்யும் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பாலாவை காந்தி மகான் அணுகுகிறார்.
பாலாவும் இவர் தான் சரியான ஆள், என்று பல லட்சத்திற்கு பில் போடுகிறார், காந்தி மகானும் தன்னால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்கிறார். அவர் பணம் ஏற்பாடு செய்த நேரம் டிமானிடேஷன் போடுகின்றனர்.
இப்படியாக போக கடைசியில் காந்தி மகான் 60வது திருமண விழா நடந்ததா, பாலா வாழ்க்கையில் காந்தியின் பயணம் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பதன் எமோஷ்னல் ட்ராமா தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பாலா-விற்கு இது ஹீரோவாக நல்ல அறிமுகம், காதல், காமெடி, எமோஷ்னல் என பல வகையில் ஸ்கோர் செய்யும் கதாபாத்திரம், ஆனாலும் சில எல்லை மீறிய தனிமனித தாக்குதல் கவுன்டர் பாலா கண்டிப்பாக அதை விட வேண்டும், காலம் மாறிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்த மாதிரி பன்ச் எல்லாம் தேவையில்லை பாலா.
பாலாஜி சக்திவேல் காந்தி மகனாக நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார், இந்த வயதிலும் மனைவி கொடுக்கும் சாப்பாட்டை அப்படி விரும்பி சாப்பிடுவது, மனைவி ஆசையை நிறைவேற்ற போராடுவது என நல்ல ஸ்கோர் செய்துள்ளார், அர்ச்சனாவும் தன் பங்கிற்கு யதார்த்தமான எமோஷ்னல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். ஹீரோயினும் நன்றாகவே நடித்துள்ளார்.
டிமானிடேஷன் பிரபலங்கள் அனைவரும் கொண்டாட, சாமனிய மக்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதற்கு இடைவேளை காட்சி காட்டிய விதம் இயக்குனர் ஷெரிப் பாராட்டுக்கள். முதல் பாதி 60ம் கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என செல்ல, இரண்டாம் பாதி 500,1000 நோட்டுகளை இவர்கள் மாற்றம் செய்ய செய்யும் வேலைகள் சிரிப்பை வரவைக்கிறது.
இத்தனை சுவாரஸ்யம் இருந்தும் அடுத்து இதுதான் நடக்கும் என்று எல்லோரும் யூகிக்கும் படி இருப்பது கொஞ்சம் திரைக்கதை தடுமாறுகிறது. அதோடு ஒரு சில இடங்களில் எமோஷ்னல் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆன பீல். அந்த எமோஷ்னல் காட்சிகள் இந்த கதைக்கு பொருந்தியதாக இருந்தாலும், இன்றைய 2K கிட்ஸ் தலைமுறைக்கு ஓவர்டோஸ் ஆக தெரியலாம்.
படத்தின் மிகப்பெரிய பலம் விவேக் மெர்வின் இசை, பின்னனி மட்டுமின்றி திமிருகாரி என்ற இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.
க்ளாப்ஸ்
கதைக்களம்
பாலாஜி சக்திவேல்-அர்ச்சனா காட்சிகள்.
பாலா பங்களிப்பு
பல்ப்ஸ்
அடுத்தடுத்த கணிக்கும்படியான காட்சிகள்.