பாலாவின் காந்தி கண்ணாடி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பாலாவின் காந்தி கண்ணாடி
விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை எற்படுத்தி கொடுத்தது.
சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும் மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்ததுபடியே ஹீரோவாக காந்தி கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாகினார் பாலா.
படத்தின் வசூல்
முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ரணம் படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் இப்படம் உருவானது. இப்படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 1.3 கோடி வசூல் செய்துள்ளது.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
