சிங்கிளாகவே இருக்கும் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது?- அவரது அப்பா சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் நிறைய இளம் நடிகர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர்.
அவர்களிடம் எப்போது திருமணம் என்று கேட்டு ரசிகர்கள் சலித்துப் போய்விட்டனர். ஆனால் கடந்த சில வருடங்களில் நாம் எதிர்ப்பார்த்த பல நடிகர், நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
அண்மையில் நடிகை பரிணீதி மற்றும் யாமி கௌதம் ஆகியோர் திடீரென திருமண புகைப்படத்தையே வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான கங்கை அமரன் அவர்கள் பிரேம்ஜி திருமணம் மற்றும் மனைவி இறப்பு குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எனது மனைவி பிரேம்ஜிக்கு திருமண செய்ய மிகுந்த ஆசையில் இருந்தார், ஆனால் அவர் மறுத்துக் கொண்டே இருந்தார். அம்மாவின் இறப்பிற்கு பின் பிரேம்ஜி கஷ்டப்படுகிறார், எது வேண்டுமானாலும் அம்மாவிடம் தான் போய் அவர் நிற்பார்.
தற்போது பிரேம்ஜி அம்மாவை ஆசையை நிறைவேற்ற திருமணத்திற்கு ஓகே கூறியுள்ளார். எனது மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கு பிறகு பிரேம்ஜி திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.