"விஜய் அப்படி செய்தது எனக்கு எரிச்சலாக இருந்தது" - மேடையில் புலம்பிய கங்கை அமரன்..
தமிழ் சினிமாவின் 80-களில் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் பல கிளாசிக் படங்களை கொடுத்தவர் கங்கை அமரன்.
பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் தற்போதும் திரைப்படங்களில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் திரைப்படம் ஒன்றின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்கை அமரன் நடிகர் விஜய் குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது " சமீபத்தில் விஜய் தனது அப்பா அம்மாவை தள்ளிவைத்து எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, நாங்களெல்லாம் எப்போது SAC-ன் நாடகத்திற்கு வாசித்தவர்கள்.
நான் ஓப்பனாக சொல்கிறேன், எனக்கு ஒன்னும் பயம்மில்லை. நாங்களெல்லாம் பெரியவர்கள் விமர்சனங்களை சொல்லத்தான் செய்வோம்.
SAC-ன் நாடகத்திற்கு வாசித்த போது விஜய் குழந்தை. அப்போதெல்லாம் நாங்கள் அவரை கொஞ்சிட்டு போவோம். விஜய்யை எப்படி வளர்த்தார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததால், எனக்கு செய்தியை கேட்டதும் அவ்வளவு எரிச்சலாக இருந்தது" என பேசியுள்ளார்.