கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
சுந்தர் சி - வடிவேலு
இயக்குநர் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி என்றாலே அந்த படத்தில் தரமான நகைச்சுவை இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்காது. வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
ஆனால், கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை என ரசிகர்களிடையே ஏக்கம் இருந்தது. அதை சரிசெய்யும் விதமாக கேங்கர்ஸ் திரைப்படம் நேற்று வெளிவந்தது.
பல ஆண்டுகளுக்கு பின் சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் வெளிவந்த கேங்கர்ஸ் படம், ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து வாரிவழங்கியுள்ளது.
கேங்கர்ஸ் படத்தின் வசூல்
இப்படத்தில் கேத்ரின் தெரசா, மைம் கோபி, வாணி போஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்களிடையே இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது.
You May Like This Video

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
