கேங்கர்ஸ் திரைவிமர்சனம்
சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் பல வருடங்கள் கழித்து, பல எதிர்பார்ப்புகளுடன் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
படத்தின் ஆரம்பமே பள்ளி மாணவி ஒருவர் காணாமல் போக, இதுபோன்ற பல சம்பவங்கள் தங்களது பள்ளியில் நடப்பதாக புகார் அளிக்கிறார் கதாநாயகி கேத்ரின் தெரசா. அதை விசாரிக்க அண்டர் கவர் ஆபிஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார்.
இந்த ஊரில் பெரிய தலைக்கட்டாக இருக்கும் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் தான் நடக்கும் அனைத்து தவறான விஷயங்களுக்கும் காரணம் என ஆசிரியை கேத்ரின் தெரசா கண்டுபிடித்து, மைம் கோபி மற்றும் அருள்தாஸூக்கு எதிராக குரல் கொடுக்கிறார். ஆனால், அவர்களை எதிர்த்து கேத்ரின் தெரசாவால் ஒன்னும் பண்ண முடியவில்லை.
இந்த நிலையில், சுந்தர் சி தனது முகத்தை மறைத்துக்கொண்டு, மைம் கோபி மற்றும் அருள்தாஸை அடித்து உதைத்து விடுகிறார். உடனே அந்த அண்டர் கவர் ஆபிஸர் சுந்தர் சி தான் என கேத்ரின் தெரசா முடிவு செய்ய, பின் அவர் அந்த ஆபிஸர் இல்லை என தெரிய வருகிறது.
வேறு என்ன காரணத்திற்காக சுந்தர் சி அவர்களை மர்ம நபர் போல் சென்று அடித்தார் என கேத்ரின் தெரசா கேட்க, தனது மனைவியை கொலை செய்தது அவர்கள் தான் என சுந்தர் சி தனது Flashback-ஐ ஓபன் செய்கிறார்.
100 கோடி ரூபாய்க்காக மனைவியை மைம் கோபி, அருள்தாஸ் மற்றும் அவர்களது அண்ணன் இணைந்து சுந்தர் சியின் மனைவியை கொலை செய்து விடுகின்றனர். அதற்கு பழிவாங்க தான் வந்திருக்கிறேன் என சுந்தர் சி கூறுகிறார்.
ஆனால், அவர்களை கொலை செய்ய போவதில்லை. மாறாக அவர்களிடம் உள்ள பணத்தை திருட போவதாக கூறுகிறார். அதற்கு வடிவேலு, கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், பாலாஜி காளையன் உதவியை நாடுகிறார். திருடும் பணத்தில் அனைவருக்கும் பங்கு என கூற அனைவரும் ஓகே சொல்கின்றனர். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டிலும் பட்டையை கிளப்பியுள்ளார். வழக்கமான ரிவெஞ் ஸ்டோரியாக இதை ட்ரீட் செய்திருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் சூப்பராக இருந்தது. இடைவேளை காட்சியில் வைத்த ட்விஸ்ட், அதன்பின் உச்சகட்ட பரபரப்பில் நகர்ந்த ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் என அனைத்துமே படத்தில் சூப்பர்.
நன்றாக போய்க்கொண்டு இருந்த கதையில், தேவையில்லாத ஒரு ஆணி போல் ஒரு ஐட்டம் சாங். அதை முற்றிலுமாக தவிர்த்து இருக்கலாம். சுத்தமா செட் ஆகவில்லை.
அடுத்ததாக வைகைப்புயல் வடிவேலு தான். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் பின்னிப் பெடலெடுக்கிறார். மீண்டும் ஒரு முறை வடிவேலு - சுந்தர் சி காம்போ வேற லெவலில் ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தொடர்ந்து ஒரு நிமிடம் கூட இடைவேளை இல்லாமல் தனது நகைச்சுவையால் மிரட்டி விட்டார் வடிவேலு. இதுதான் அவருடைய உண்மையான கம் பேக்.
கதாநாயகி கேத்ரின் தெரசாவின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். தொடக்கம் முதல் இறுதி வரை தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்து நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் கூட மெனக்கட்டு நடித்துள்ளார். அதுவும் சிறப்பு. அதே போல் கேமியோ ரோலில் நடித்த நடிகை வாணி போஜனும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய பங்களிப்பும் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது.
மேலும் பகவதி பெருமாள், முனீஸ்காந்த், மைம் கோபி, அருள்தாஸ், ஹரீஷ் பேரடி மற்றும் காளையன் என அனைவருக்கும் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அதை சிறப்பாகவும் செய்துள்ளனர். பின்னணி இசை ஓகே. ஆனால், பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு கலர்புல். எடிட்டிங் சூப்பர்.
பிளஸ் பாயிண்ட்
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பு
வடிவேலு
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
திரைக்கதை
நகைச்சுவை காட்சிகள்
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்
மைனஸ் பாயிண்ட்
தேவையில்லாத ஆணி போல் படத்திற்கு இடையில் வந்த ஐட்டம் சாங்
மொத்தத்தில் சுந்தர் சி - வடிவேலுவின் சிறப்பான தரமான நகைச்சுவை விருந்து தான் இந்த கேங்கர்ஸ்.
You May Like This Video