நடிகர் வடிவேலு மேல் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்.. சுந்தர்.சி ஓபன் டாக்
வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்று சொன்னதுமே மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது வடிவேலு தான்.
எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் வடிவேலு தனி ராஜ்ஜியம் நடத்தினார், இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தவர் தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
விரைவில் வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் என்ற படம் வெளியாக உள்ளது.
சுந்தர்.சி
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் வரும் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுந்தர்.சி, வடிவேலு குறித்து பேசியுள்ளார்.
நானும் வடிவேல் சாரும் இணைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக பணியாற்றி வருகிறோம். 2003ம் ஆண்டு அவருடன் பயணத்தை தொடங்கினேன், ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா? என்று அவரை பார்த்து வியந்துகொண்டிருக்கிறேன்.
நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார்தான். ஒரு காட்சிக்கு நான் 10 சதவிகிதம் யோசித்தால் போதும் மீதி 90 சதவிகிதம் அவரே நடிப்பில் படத்தை சிறப்பாக்கி விடுவார்.
வடிவேலு சார் மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது, அவர் இடையில் கொஞ்சம் நடிக்காமல் இருந்தது தான். இனிமேல் அவரைப் பார்த்து சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது என எல்லோரும் சொல்ல வேண்டும் என்று வடிவேலு குறித்து பேசியிருக்கிறார்.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
