நிகழ்ச்சி மேடையில் நாயகியை பற்றி அசிங்கமாக பேசிய கஞ்சா கருப்பு- யாரை கூறினார்
கஞ்சா கருப்பு
நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர். ஆரம்பகட்டத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த கஞ்சா கருப்பு இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் நடிப்பதில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக நடிப்பதில்லை.
இப்போது ஓங்காரம் என்ற படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார் என தெரிகிறது.

ஆடியோ வெளியீடு
இந்த ஓங்காரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்திருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பட நாயகி வரவில்லை. அந்நிகழ்ச்சியில் பேசிய கஞ்சா கருப்பு நல்ல படம், இவ்வளவு பத்திரிக்கையாளர்கள் வந்துள்ளார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் நல்ல பிரபலம் தான், ஆனால் இவர்கள் எல்லாம் ஏன் வரவில்லை என நாயகி குறித்து அசிங்கமான வார்த்தையில் பேசியுள்ளார்.
அந்த வீடியோ இப்போது ரசிகர்களிடம் டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
