நடிகர் கஞ்சா கருப்பு வீட்டில் நடந்த துயரம்! முதல்வர் விஜய்க்கு அவர் வைத்த வேண்டுகோள்
காமெடியனாக தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் நடித்து இருப்பவர் கஞ்சா கருப்பு. அவர் சொந்தமாக படம் தயாரித்து எல்லா சொத்துக்களையும் இழந்த நிலையில், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருந்தார்.
தற்போது சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார் அவர். மேலும் கடந்த தேர்தலில் கஞ்சா கருப்பு அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தம்பி மரணம்
கஞ்சா கருப்புவின் உடன் பிறந்த தம்பி அறிவழகன் இன்று சிவகங்கையில் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருக்கிறது.
"பஸ் தான் அவர் மீது ஏறியது என சொல்கிறார்கள். அதை செய்த குற்றவாளி யார், என்ன பஸ் என போலீஸ் கண்டறிய வேண்டும். முதல்வர் இளையதளபதி விஜய் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கஞ்சா கருப்பு பேட்டி கொடுத்து இருக்கிறார்.