அய்யோ போச்சே.. கதறிய கஞ்சா கருப்பு! வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகார்
நடிகர் கஞ்சா கருப்பு பிரபல காமெடி நடிகராக ஒரு காலத்தில் இருந்தவர். படம் தயாரிக்கிறேன் என மொத்த பணத்தையும் நஷ்டமாகிவிட்டதாக அவர் முன்பே கூறி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் கஞ்சா கருப்பு 2021ல் இருந்து ஒரு வீட்டை 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்.
அந்த வீட்டின் உரிமையாளர் தற்போது போலீசில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். கஞ்சா கருப்பு தனக்கு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்து இருக்கிறார் என்றும், வீட்டை உள்வாடகைக்கு விட்டிருக்கிறார் என்றும் புகார் கூறி உள்ளார்.
மேலும் குடி, மற்ற விஷயங்கள் என வீட்டை லாட்ஜ் போல மாற்றிவிட்டார் எனவும், அதை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
கதறிய கஞ்சா கருப்பு
இந்நிலையில் கஞ்சா கருப்பு தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு போலீசுடன் சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி கதறினார்.
தனது கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை, 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை என சொல்லி போலீசிடம் கதறி இருக்கிறார்.
வீட்டில் உரிமையாளர் தான் பொருட்களை சேதமாக்கி இருக்கிறார் என கஞ்சா கருப்பு புகார் கூறி இருக்கிறார்.