மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நடிகர் கஞ்சா கருப்பு.. என்ன நடந்தது
நடிகர் கஞ்சா கருப்பு காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர். ஆனால் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் மொத்த பணத்தையும் இழந்தவர் அவர்.
அதற்கு பிறகு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் அவர். சமீபத்தில் அவர் வாடகை வீட்டின் உரிமையாளர் மீதும் புகார் கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் வாடகை பாக்கி என ஓனர் கூறிய நிலையில், வீட்டில் இருந்த பணம் விருதுகள் போன்றவற்றை காணவில்லை என கூறி கதறி அழுதார் கஞ்சா கருப்பு.
மருத்துவமனையில் போராட்டம்
இந்நிலையில் சென்னை போரூரில் மாநகராட்சி மருத்துவமனைக்கு இன்று சென்று இருக்கிறார் கஞ்சா கருப்பு.
அப்போது அங்கு சிகிச்சை அளிக்க 3 மணி நேரமாக மருத்துவர்கள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். அதனால் கஞ்சா கருப்பு அங்கு சத்தம் போட்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்.அது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்போது அங்கு சிகிச்சை அளிக்க 3 மணி நேரமாக மருத்துவர்கள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். அதனால் கஞ்சா கருப்பு அங்கு செவிலியர்களிடம் சத்தம் போட்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்.
அது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.