இதுவரை கருடன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கருடன்
கதாநாயகனாக சூரி நடித்து கடந்த மே 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
வசூல் விவரம்
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் வெளிவந்து நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu