மாபெரும் வெற்றி! ஐந்து நாட்களில் கருடன் திரைப்படம் செய்துள்ள வசூல்
சூரியின் கருடன்
கதாநாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார் சூரி. விடுதலை படத்தின் மூலம் மக்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்த இவருக்கு கருடன் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ஐந்து நாள் வசூல்
முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெளிவந்து ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, சூரியின் கருடன் திரைப்படம் உலகளவில் கடந்த ஐந்து நாட்களில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தின் இறுதியில் கண்டிப்பாக கருடன் திரைப்படத்திற்கு இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
