கருடன்
விடுதலை படத்திற்கு பின் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார் சூரி. அதன்படி, சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் கருடன்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள கருடன் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 42 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
கதாநாயகனாக கெத்து காட்டி வரும் சூரியின் நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுகாளி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu
