திரையரங்கில் வசூலை வாரி குறித்த கருடன்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா
கருடன்
சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.
சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்ணி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த கருடன் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.
OTT ரிலீஸ்
திரையரங்கில் சக்கப்போடு போட்ட கருடன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் OTT-யில் வெளியாகும் என்கின்றனர்.
இப்படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது.
கருடன் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் அடுத்ததாக கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
