கருடன் படம் எப்படி இருக்கு.. Twitter விமர்சனம்
கருடன்
சூரி கதையின் நாயகனாக நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கருடன். இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்கள் இதுவரை வெளிவந்துள்ளது.
வெற்றிமாறன் கதையில் உருவாகியுள்ள கருடன் திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்ட பல நட்சத்த்திரங்கள் நடித்துள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ரோஷினி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டிரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. விடுதலை படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் கருடன் படத்தை பார்க்க காத்திருந்தனர்.
Twitter விமர்சனம் :
இந்த நிலையில், இன்று உலகளவில் வெளிவந்துள்ள சூரியின் கருடன் திரைப்படத்தை பார்த்துவிட்டு Twitter-ல் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
படத்தை பார்த்த பெரும்பான்மையானோர், படத்தில் சூரியின் நடிப்பும் இயக்குனர் செந்தில் குமாரின் திரைக்கதையும் அருமை என தெரிவித்துள்ளனர். மேலும் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா உள்ளிட்டோரின் நடிப்பு சூப்பர் என்றும் பின்னணி இசையில் யுவன் மிரட்டிவிட்டார் என்றும் விமர்சனத்தை கூறியுள்ளனர்.
இதோ Twitter விமர்சன பதிவுகள் :
#Garudan 3.5/5 A sincere & satisfying rural action drama that is well written with each and every character established convincingly. It’s all about friendship, ego and betrayal between three men played brilliantly by @sooriofficial (who is extraordinary), @SasikumarDir (Perfect… pic.twitter.com/wdo0Ybon1v
— sridevi sreedhar (@sridevisreedhar) May 30, 2024
What a pleasant surprise #Garudan turned out to be! @sooriofficial is fantastic in this neat little tale of friendship, loyalty and deceit which, even if it gets a little too convenient and predictable in the end, still makes for an entertaining watch. It's been a while since we… pic.twitter.com/sYklPDPDkT
— Gopinath Rajendran (@gopi_rajen) May 30, 2024
Big or small film doesn’t matter to @thisisysr. His score in #Garudan is as powerful as any other big film he had composed before. He inherited his dad @ilaiyaraaja ‘s quality in this aspect! Also, I liked how he maintained silence wherever required in Garudan! pic.twitter.com/G5IfJyqdKd
— Rajasekar (@sekartweets) May 30, 2024