காமெடி பக்கம் திரும்பிய கௌதம் மேனன்.. வடிவேலுவுடன் இப்படி ஒரு படம் இயக்குகிறாரா?
இதுவரை கௌதம் மேனன் ரொமான்டிக் படங்கள் இயக்கி தான் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது அவர் ஒரு முழு காமெடி படத்தை எடுக்க போகிறார் என்றும் அதற்காக வடிவேலு உடன் பேச்சுவார்த்தை செய்ய இருக்கிறார் எனவும் தகவல் வந்திருக்கிறது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் இந்த படம் பற்றி பேசி இருக்கிறார்.
இந்த படத்திற்கான கதை பற்றி தனது டீம் உடன் டிஸ்கஷனில் இருப்பதாக கூறிய கௌதம் மேனன், தான் வடிவேலுவை இன்னும் அணுகி பேசவில்லை என கூறியுள்ளார்.
வடிவேலு இந்த படத்தை ஒப்புக்கொண்டால் இந்த படம் ரசிகர்களுக்கு வித்யாசமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.