சூர்யா பற்றி புது சர்ச்சையை கிளப்பிய காயத்ரி ரகுராம்! ராக்கெட்ரி படத்தில் ஏன் அதை சொல்லவில்லை?
சூர்யா தற்போது கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவர். அவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார். அதன் பிறகு சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் ராக்கெட்ரி படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராக்கெட்ரி படத்தில் சூர்யா வந்த ரோலில் மற்ற மொழியில் நடித்தவர்கள் 'ஜெய் ஹிந்த்' என கூறும் வசனம் இருக்கிறது. ஆனால் தமிழில் மட்டும் சூர்யா அதை கூறவே இல்லை என காயத்ரி ரகுராம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவில் ஒரு பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட்ரி படத்தில் நடித்த சூர்யா 'ஜெய்ஹிந்த்' என்று சொல்லாதது ஏன்? - பாஜக தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 6, 2022
#Rocketry #Suriya #GayathriRaghuram #Madhavan pic.twitter.com/6Id34oSkN1