பிக்பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராமின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்
தமிழ் சினிமாவின் நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ரகுராம் மாஸ்டர்.
இவரது மகள் என்ற அடையாளத்துடன் 14 வயதிலேயே சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் காயத்ரி. இவர் 2002ம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு அவர் நிறைய படங்களில் நடித்து வந்தார். பின் பட வாய்ப்புகள் குறைந்து வர 2006ம் ஆண்டு மென்பொருள் பொறியாளர் தீபன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் 2008ம் ஆண்டு தனது கணவர் கொடுமை செய்வதாக கூறி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். 2010ல் விவாகரத்து பெற்ற காயத்ரி வானம், வை ராஜா வை, இது என்ன மாயம் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
பிக்பாஸ் முதல் சீசனிலும் கலந்துகொண்டு பலரது கோபத்தையும் பெற்றார். தற்போது அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்த நேரத்தில் காயத்ரி திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri