என்ன லோகேஷ் இதெல்லாம்? உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை.. கொந்தளித்த நடிகை
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய படங்களில் ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படி காதலர்கள் இருந்தால், பெண் கொலை செய்யப்படுவது போல தான் காட்சிகள் இருக்கும்.
விக்ரம் படத்தில் நடிகை காயத்ரி ஷங்கர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். படத்தில் காயத்ரியின் தலையை வெட்டி கொலை செய்யப்படுவது போல காட்சிகள் இருக்கும்.
என்ன லோகேஷ் இதெல்லாம்..
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகை ஸ்ருதி ஹாசன் உடன் ரொமான்ஸ் செய்யும் 'இனிமேல்' என்ற பாடல் டீஸர் வெளியாகி இருக்கிறது. அவர்களது ரொமான்ஸ் பார்த்து பலரும் ஷாக் ஆக ரியாக்ட் செய்து இருக்கின்றனர்.
"உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு.. what is this ma லோகேஷ்" என நடிகை காயத்ரி ஷங்கர் ட்விட்டரில் கேட்டிருக்கிறார்.
Unga padathula romance panna thalayai vettittu.. what is this ma @Dir_Lokesh !? ?? https://t.co/3VZOH4SEnk
— Gayathrie (@SGayathrie) March 21, 2024

தனது பூனையை பார்த்துக்கொள்பவருக்கு மொத்தச் சொத்தையும் பரிசாக அறிவித்த 82 வயது முதியவர் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
