GDN திரை விமர்சனம்
மாதவன் சமீப காலமாக மிகவும் கவனமாக தனக்கு எது சரியாக வருமோ அதை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் GDN வாழ்க்கை வரலாற்றை படமாக நடித்துள்ளார், இந்த பயோகிராபி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
GDN கொங்கு பகுதியில் ஒரு கிராமத்தில் மிகப்பெரிய கனவோட வாழ்ந்து வருகிறார். அதன் முதற்கட்டமாக ஒரு மோட்டர் பைக் வாங்கி அதை பிரித்து மோட்டார் பற்றி தெரிந்துகொள்கிறார். அதை தொடர்ந்து பருத்தி ஆலையில் வேலைக்கு செல்கிறார்.
அங்கு தொழிலை நன்றாக கற்றுகொண்டு மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிறார், ஆனால் இவரின் வளர்ச்சி பிடிக்காத ஒரு வெள்ளைகாரர் குறிப்பாக்க வருமான வரித்துறை அதிகாரி, அவர் GDN-க்கு மிகப்பெரிய நஷ்டத்தை வரவைக்கிறார்.

இதனால் சோர்வடைந்த GDN-க்கு ஒரு வெள்ளைகாரரே ஒரு பஸ் கொடுத்து உதவ, அந்த ஒரு பஸ் வைத்து 400 பஸ்களாக ஆக்கி கல்லூரி, பாலிடெக்னிக் என தமிழகத்திலேயே மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிறார்.
அதே நேரத்தில் இவரை எப்படியாது அசைத்து பார்க்க வேண்டும் என அந்த வெள்ளைகார வருமானவரி அதிகாரி, நேர்மையான ஜெயராமை வைத்து GDN வரிகட்டாதவர் என மக்களிடம் கொண்டு சென்று அவர் பேர், புகழை கெடுக்க ப்ளான் செய்ய இதிலிருந்து GDN மீண்டாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
மாதவன் பயோகிராபொ என்றாலே அசால்ட் ஆக தட்டி தூக்குகிறார், நம்பி நாரயணன் தொடர்ந்து GDN ஆகவும் ஒவ்வொரு அசைவு மேனரிசம் என தூள் கிளப்புகிறார், கண்டிப்பாக அவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் தான்.
அதே நேரத்தில் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வந்து செல்கின்றனர், கருணாகரன், ஜெயராம், சத்யராஜ், ப்ரியாமணி, வினய், துஷாரா, தம்பி ராமையா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர், அவர்கள் தங்கள் வேலைகளை டீசண்ட் ஆக செய்துள்ளனர், குறிப்பாக ஜெயராம், சத்யராஜ் மனதில் நிற்கின்றனர்.

பயோகிராபி என்றால் ஏதோ ஜவ் ஆக இழுப்பார்கள் என்ற எண்ணத்தை இயக்குனர் கிருஷ்ணா சுக்கு நூறாக உடைத்துள்ளார், படம் முழுவதும் ஏதோ கமர்ஷியல் படம் போல் செல்கிறது, அதிலும் ஜப்தி செய்து ஏலம் விடும் காட்சி, சத்யராஜ் நாயை அழைத்து வந்து ஜெயராமிடம் பேசும் காட்சி எல்லாம் செம மாஸ் மொமண்ட்ஸுகளாகவே அமைந்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாதியும் GDN வளர்ச்சி அவரின் வீழ்ச்சி அதோடு இந்த அரசாங்கத்தால் எப்படி சூழ்ச்சியில் சிக்கி என்னாகிறார் என்பதை எமோஷ்னலாக எடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா, அதிலும் ஆங்கங்கே NSK, MR ராதா வரும் கார் காட்சி, ஹிட்லரை சந்திக்கும் காட்சி என GDN தன் வாழ்வில் எப்படிபட்ட ஒரு ஆளுமையா இருந்துள்ளார் என்பதை காட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் கிளைமேக்ஸில் அந்த சொத்து விஷயம் GDN எவ்ளோ பெரிய மாஸ்டர் மைண்ட் என காட்டியுள்ளனர், மேலும் படம் சுனேத்திரா முன்பு நடக்கும் கதை, செட் எல்லாம் அத்தனை தத்ரூபம், கண்டிப்பாக செட் அமைத்தவர் தனி பாராட்டுக்கள்.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை இரண்டுமே டாப் நாச் தான்.
க்ளாப்ஸ்
மாதவன் வாழ்ந்து உள்ளார், மற்ற நடிகர்கள் பங்களிப்பு
தொய்வில்லாமல் செல்லும் திரைக்கதை
டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
முதல் மனைவி பிரிவு இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் நம் நாட்டில் வாழ்ந்த ஒரு சாதனையாளர் சரித்திரத்தை பாடம் தாண்டி படமாக காட்டியதற்கு படக்குழுவுக்கு வாழ்த்துகள்.
