கீதாஞ்சலி பட நடிகை கிரிஜாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை கிரிஜா
சினிமாவில் 80, 90களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மத்தியில் டாப் நாயகியாக இருந்தவர் நடிகை கிரிஜா.
1989ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இதயத்தை திருடாதே படத்தின் கதாநாயகி, இந்த படம் கீதாஞ்சலி படத்தின் ரீமேக் ஆகும். 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது, ஓ பிரியா பிரியா பாடலை 90களின் ரசிகர்கள் நிச்சயம் மறந்து இருக்க மாட்டார்கள்.
இப்பட வெற்றியை தொடர்ந்து மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 4 படங்களில் மட்டும் தான் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் 2002ம் ஆண்டு வெளிவந்த ஹிருதயாஞ்சலி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார், 2003ம் ஆண்ட துஜே மேரி கசம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
நடிகை ரீ-என்ட்ரி
18 வயதில் முறைப்படி பரதநாட்டியம் கற்ற இவர் யோகாவும் பயின்றவர். இந்த நிலையில் இவர் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கம்பேக் கொடுத்திருக்கிறார்.
அதாவது, இவர் ‘இப்பனி டப்பிடா இலியாலி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் இவர் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்தவர்கள் கிரிஜாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.