ஜெமினி கணேசன் மகளுக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்த நடிகர்.. கதறி அழுத நடிகை
ஜெமினி கணேசன் மகள் ரேகா
காதல் மன்னன் என்று திரையுலகில் அழைக்கப்படும் ஒரே நடிகர் ஜெமினி கணேசன். இவருடைய மகள் தான் பிரபல பாலிவுட் நடிகை ரேகா.
இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது வளர்ந்து வரும் பல நடிகைகளின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் ரேகா.
சொல்லாமல் முத்தம் கொடுத்த நடிகர்
இந்நிலையில், நடிகை ரேகா ஒரு முறை பிரபல நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி என்பவருடன் இணைந்து அஞ்சனா சஃபர் எனும் படத்தில் நடித்து வந்துள்ளார். அப்படத்தின் ஹீரோயின் உதட்டில் ஹீரோ முத்தம் கொடுப்பது போல் காட்சி ஒன்று இருக்கிறது.
இந்த காட்சியை படமாக்கும் பொழுது ஹீரோயின் ரேகாவிடம் இது முத்தக்காட்சி என்று இயக்குனர் சொல்லவில்லையாம். இயக்குனர் ஆக்ஷன் என்று கூறியவுடன் ஹீரோ பிஸ்வஜீத் சாட்டர்ஜி, நடிகை ரேகாவின் உதட்டில் முத்தம் கொடுக்க துவங்கிவிட்டாராம்.
இயக்குனர் கட் சொல்லாத காரணத்தினால் இந்த முத்த காட்சி ஐந்து நிமிடம் எடுக்கப்பட்டதால், அந்த சமயத்தில் நடிகை ரேகா கதறி அழுது கண்ணீர் விட்டாராம். ஆனால் அதையெல்லாம் கூட கவனிக்காமல், படக்குழுவினர் கை தட்டியும், விசில் அடித்தும் கேமராவிற்கு பின் நின்று கொண்டிருந்ததாக நடிகை ரேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹீரோ பிஸ்வஜீத் சாட்டர்ஜியிடம் கேட்டபோது இது முழுக்கமுழுக்க இயக்குனரின் யோசனை. முத்த காட்சி கதைக்கு தேவைப்பட்டதாக இயக்குனர் சொன்னதனால் தான், நான் முத்தம் கொடுத்தேன் என்று பிஸ்வஜீத் சாட்டர்ஜி கூறினாராம்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
