மகன் பிறந்தநாள்!! அவனிடம் இருந்து அதை கற்று கொண்டேன்.. ஜெனிலியா நெகிழ்ச்சி

Bhavya
in பிரபலங்கள்Report this article
நடிகை ஜெனிலியா
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுக்க தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நிறைய வெற்றிப்படங்கள் நடித்து வந்தார்.
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை கொடுத்தது.
இதனிடையே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ஜெனிலியா நெகிழ்ச்சி
இந்நிலையில், தன்னுடைய மூத்த மகன் 10 வயது பிறந்தநாளை முன்னிட்டு ஜெனிலியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் உணர்ச்சிபூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், "இனி ரியான் வயது சிங்கிள் டிஜிட்டில் இருக்காது. அனைவரிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகும் குணம் கொண்ட என் மகனிடம் இருந்து நிறைய வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொண்டேன்.
எந்த வேலையாக இருந்தாலும் அதை மன உறுதியுடன் செய்து முடிக்கும் எனது மகன் இன்று அவனது பிறந்தநாளை கொண்டாடுகிறான்" என்று பதிவிட்டுள்ளார்.