ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குனர் அறிவிப்பு.. ஷங்கருக்கு இடத்தில் யார் தெரியுமா
ஜென்டில்மேன்
அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜென்டில்மேன்.
கே.டி. குன்னுமோகன் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அறிமுக படத்திலேயே வெற்றியை பதித்தார் ஷங்கர். பல ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என தயாரிப்பாளர் குஞ்சுமோகன் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஷங்கருக்கு பதில் இவரா
இந்நிலையில், தற்போது இப்படத்தின் இயக்குனர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ஷங்கருக்கு பதில் கோகுல் கிருஷ்ணா என்பவர் ஜென்டில்மேன் 2 படத்தை இயக்கவுள்ளார்.
இவர் இதற்குமுன் நானி நடிப்பில் வெளிவந்த ஆஹா கல்யாணம் எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#GentlemanFilmInternational
— K.T.Kunjumon (@KT_Kunjumon) June 6, 2022
Proud to announce A.Gokul Krishna @agoks as the director of our mega blockbuster project #Gentlemen2 @mmkeeravani @NayantharaaC @PriyaaLal @johnsoncinepro @ajay_64403 @UrsVamsiShekar @PRO_SVenkatesh pic.twitter.com/M8YXR2ovIh