சோனியா காந்தியாக நடிக்கும் ஜெர்மன் நடிகை- அச்சு அசல் அவரைப் போலவே உள்ளாரே, இதோ பாருங்க
யாத்ரா 2
திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் வாதிகள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது.
அப்படி கடைசியாக மறைந்த நடிகையும், முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தயாராகி வெளியாகி இருந்தது.
தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி யாத்ரா என்ற படம் தயாராகி வருகிறது.
இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
சோனியா காந்தி
இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார். இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மறைந்த நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி ஆவார்.சோனியா காந்தியாக இவர் நடிக்கும் காட்சியின் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவரைப் போலவே உள்ளாரே என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.