ரீ-ரிலீஸில் வசூல் சாதனை படைக்கும் கில்லி.. மாஸ் காட்டும் தளபதி விஜய்
கில்லி
நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் கண்டிப்பாக கில்லி படமும் இடம்பெறும்.
தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் உருவான இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து இருந்தார். திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று 2004ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை மீண்டும் தற்போது ரீ-ரிலீஸ் செய்தனர். ரீ-ரிலீஸ் கலாச்சாரம் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகமாகி வருகிறது.
ரீ-ரிலீஸ் வசூல்
பாபா, ஆளவந்தான், 3, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிய நிலையில், கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். இதுவரை எந்த படத்திற்கு ரீ-ரிலீஸில் கிடைக்காத வரவேற்பு கில்லி படத்திற்கு கிடைத்தது. இவ்வளவு ஏன், புது படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு கூட இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகஸ்தர் அனைவரும் இணைந்து நடிகர் விஜய்யை சமீபத்தில் நேரில் சந்தித்தனர். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.

20 ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரீ-ரிலீஸில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையவில்லை என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கில்லி ரீ-ரிலீஸின் இறுதி வசூல் எவ்வளவு இருக்கும் என்று.
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri