கில்லி - மங்காத்தா - படையப்பா படங்களின் மொத்த வசூல் விவரம்.. எது அதிகம் தெரியுமா?

By Kathick Feb 04, 2026 06:00 AM GMT
Report

ரீ ரிலீஸ்

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்து, இன்று வரை ரீ ரிலீஸ் படங்களிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

கில்லி - மங்காத்தா - படையப்பா படங்களின் மொத்த வசூல் விவரம்.. எது அதிகம் தெரியுமா? | Ghilli Mankatha And Padayappa Movies Box Office

இதை தொடர்ந்து 2025ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்திற்கும் நல்ல வசூல் வரவேற்பு கிடைத்தது. இதன்பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பல முறை வேண்டுகோள் விடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம்தான் மங்காத்தா.

கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், கில்லி, மங்காத்தா, படையப்பா ஆகிய மூன்று படங்களும் வெளிவந்த சமயத்தில் செய்த வசூல் மற்றும் ரீ ரிலீஸில் செய்த வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா

'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா

கில்லி - மங்காத்தா - படையப்பா

1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம் ரூ. 63 கோடி வசூல் செய்ய, ரீ ரிலீஸில் ரூ. 18 கோடி வசூலித்தது.

2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் உலகளவில் ரூ. 38 கோடி வசூல் செய்தது. இதன்பின் கடந்த 2024ஆம் ஆண்டு ரீ ரிலீஸ் ஆனபோது ரூ. 32 கோடி வசூலித்தது.

கில்லி - மங்காத்தா - படையப்பா படங்களின் மொத்த வசூல் விவரம்.. எது அதிகம் தெரியுமா? | Ghilli Mankatha And Padayappa Movies Box Office

அஜித்தின் மங்காத்தா படம் 2011ஆம் ஆண்டு வெளிவந்த சமயத்தில் உலகளவில் ரூ. 83 கோடி வசூலித்த நிலையில், ரீ ரிலீஸில் ரூ. 21.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் என்கிற லிஸ்டில் இணைந்துவிட்டது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US